ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பேராயர் மல்கம் ரஞ்சித்தை பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்திய அதேவேளை,இந்த நோக்கத்திற்காக ஒரு சுயாதீன நீதித்துறை ஆணைக்குழுவை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாமல் ஒப்புக்கொண்டார்.