Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்களிப்பு: 7 இலட்சம் பேர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு: 7 இலட்சம் பேர் தகுதி

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற 07 இலட்சம் பேரில் பொலிஸ், ஆயுதப்படை மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles