Tuesday, April 29, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹெராவைக் கண்டுகளித்தார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles