அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
‘USS Spruance’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இந்த கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இந்த கப்பல் நாளை (20) நாட்டை விட்டு புறப்பட உள்ளது.