Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் உள்ள ஹோட்டலொன்றில் இருந்து தோட்டா மீட்பு

கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றில் இருந்து தோட்டா மீட்பு

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் உயிருள்ள தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள அரலிய மரத்திற்கு அருகில் உள்ள சுவரின் அடிபகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே இந்த தோட்டா சிக்கியுள்ளது.

பிரமுகர்கள் ஹோட்டலில் வந்து தங்கியிருந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் இருந்த இடத்திலேயே இந்த தோட்டா கிடந்துள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles