மஹா இந்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சுது வெலிபொத்த ரயில் கடவையில் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று (19) மதியம் 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுது வெலிபொத்த பகுதியிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த லொறியொன்று, மாத்தறையிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த இடத்தில் ரயில் சிக்னல்கள் இயங்கவில்லை என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளதுடன், சில மாதங்களுக்கு முன்பு இந்த இடத்தில் ஜீப் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் லொறிக்கு பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.