எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்போது கலாசார அமைச்சராக செயல்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புனித அந்தோனியார் தேவஸ்தானத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
அந்த தாக்குதலின் போது உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்களின் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக ‘சுவசக்தி’ மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.