மீகொட பிரதேசத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீகொட – தம்பே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேனவில் இருந்து மீகொட நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர் தப்பியோடிய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.