சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல் பாஷர் பிரதேசத்தில் ஆா்.எஸ்.எப் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ் உயிரிழந்துடன் 46 போ் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.
இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.