இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 26,889 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 12 இலட்சத்து 24,948 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.