ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியான எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சுமார் 1500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தேர்தல்கள் செயலகத்தின் பாதுகாப்பிற்காக அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் விமானப் படையின் விசேட ஸ்னைபர் படையை பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தின் பாதுகாப்பிற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.