தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1700 ரூபா நாளாந்த சம்பளம் தொடர்பில் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இறுதித் தீர்மானத்தை வழங்கவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு 07 தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.
சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தீர்மானங்களுக்கு தோட்டக் கம்பனிகள் இணங்கவில்லையென்றால், விசேட சட்ட ஒழுங்குமுறைகளை தயாரித்து, தேவையானவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பல வருடங்களாக விடுபட்ட தொழிலாளர் நலன்புரி நிதி அடுத்த வருடம் முதல் வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.