கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் நேற்று (11) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த சரக்கு கப்பலில் நேற்று மதியம் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பு காரணமாக, கப்பலில் இருந்த அனைத்து செயல்பாட்டுக் குழுவினர் மற்றும் உதவிக் குழு உறுப்பினர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும் தீயணைப்பு சேவை திணைக்களத்தின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.