நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் (12) நாளையும் (13) சகல கடமைகளையும் விடுத்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானியாக வெளியிடப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சேவை அரசியலமைப்பில் தமது முன்மொழிவுகள் உள்ளடக்கப்படாமை காரணமாக அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.