தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கை இவ்வாறான ஆபத்தான நிலைமையை மரபுரிமையாகப் பெறவில்லை என அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.