இலங்கையின் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 35 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குதிரைமலை முனையிலிருந்து இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கல்பிட்டி கடற்படை கப்பல் விஜயா நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.