Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவ மாட்டோம் - உலக வங்கி

இலங்கைக்கு உதவ மாட்டோம் – உலக வங்கி

பேரண்ட பொருளாதார கொள்கை கட்டமைப்பு ஒன்று முன்வைக்கப்படும் வரை இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்க போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து அதனை மீட்பதற்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மக்கள் தொடர்பாக கரிசனை கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles