மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 நாட்களுக்குள் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
உள்ளுர் சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதையடுத்து, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.