தும்பர, போகம்பறை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் தும்பற போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நோர்டன் பிரிட்ஜ் கலவத்தை – ஹெல்பொடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மந்திமுத்துத் தவராஜ் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.