மெலிபன் குழுமத்தின் தலைவர் ஏ. பி. ரத்னபால சமரவீர நேற்று (07) காலமானார்.
அவர் தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு ஜனவரி 20 இல் பிறந்த இவர், ஏ.ஜி.ஹின்னி அப்புஹாமியின் மகனும் ஆவார்.
மெலிபன் குழுமம் இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமாகும். அவர் இலங்கையின் பிஸ்கட் தொழிலை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதில் சிறந்த பணியை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
