சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டுகொட பொலிஸ் வீதித்தடையில் காரை சோதனையிடச் சென்ற நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, துப்பாக்கி இயங்கியுள்ளதுடன், துப்பாக்கியை கைப்பற்ற முயன்ற நபரின் வயிற்றிலும், பொலிஸ் சார்ஜன்டின் காலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் மற்றைய நபரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
