Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,700 ரூபா வேதனத்தை பெற்றுத் தருவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை!

1,700 ரூபா வேதனத்தை பெற்றுத் தருவதாக நான் வாக்குறுதியளிக்கவில்லை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக 1,700 ரூபாவை பெற்றுத் தருவதாகத் தாம் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விருந்தகம் ஒன்றில் ஊடகங்களின் செய்திப்பிரிவின் பிரதானிகளைச் சந்தித்த அவர் இதகை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கைகளைஇ தொழில் அமைச்சுஇ வேதன நிர்ணய சபையின் ஊடாக மேற்கொண்டிருந்தது.

தோட்டத்துறை என்ற பழைமையான விடயத்தை என்னிடம் கூற வேண்டாம். தற்போது விவசாய முறைமையே கடைபிடிக்கப்படுகிறது.

அதன்கீழ் இலாபமீட்டி தொழிலாளர்களை பராமரிக்க முடியாத நிறுவனங்களிடம் இருந்து தோட்டக் காணிகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டப் பகுதிகளில் உள்ள லயன் அறைகள் அமைந்துள்ள காணிகளைக் கிராமங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles