ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லையென்றாலும் சவாலான நேரத்தில் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (7) தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி, பொருத்தமான நபரை தெரிவு செய்து இருப்பதாகவும், இது தனது பொறுப்பாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.