காலி – கொழும்பு வீதியில் நேற்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரைதுடுவ, வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணும் சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.