இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
எனினும், இந்த போட்டியின் வெற்றி இரு தரப்புக்கும் முக்கியமானது.
இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும், இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.