காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினால் 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தின் பெரும்பகுதி 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வடமாகாண துறைமுக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் கடனுதவி வழங்க எண்ணியிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கான திட்டங்களை வழங்குவதில் இந்தியா தற்போது அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.