பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு அமைய பங்களாதேஷ் பாராளுமன்றம் இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தை கலைக்க காலக்கெடு விதித்திருந்த போராட்டக்காரர்கள், குறித்த கால அவகாசத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.