தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை விட்டுச் சென்றமையினால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே ரயில் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என ரயில் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.
இந்நிலைமை காரணமாக பல ரயில் பயணங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.