இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.