ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காமல் அமைச்சுப் பதவியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் பதவியை விட்டு விலகுவார்கள் என நம்புவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம் திகதி அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்ததாக அவர் கூறினார்.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் கட்சியின் பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வேறு சிலரும் வரக்கூடும் எனவும், பொதுஜன பெரமுனவில் கட்சியின் செயலாளர் மாத்திரமே எஞ்சியிருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.