பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் இன்று (05) பிற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது சகோதரியுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அங்கு பாரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வருகின்ற நிலையில், இந்த வன்முறையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.