கங்காராமையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காலஞ்சென்ற கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு கங்காராம விகாரையை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையான காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.