இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக இருந்த நிலையில், இதற்காக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் தற்போது இந்த விஜயம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் அண்மையில் இலங்கைக் கடற்படையினரின் படகில் மோதி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இதற்கொரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.