லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு, சிவப்பு சீனி, கீரி சம்பா, சிவப்பு கௌபி, இந்திய பெரிய வெங்காயம், வெள்ளை கௌபி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன
விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.