Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகையூட்டல் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கைது

கையூட்டல் குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கைது

கையூட்டல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மட்டக்களப்பில் வைத்து கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்காகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை உரிய தரப்பினரிடம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற முனைந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர், அமைச்சரின் மட்டக்களப்பில் உள்ள காரியாலயத்திலும், கரடியனாறு பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் அரசியல் செயற்பாட்டாளர், மட்டக்களப்பு பகுதியில் உள்ள வங்கியொன்றுக்கு அருகிலும் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தபடவுள்ளதாகக் கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles