நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டம் கடந்த ஜனவரியில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதன் சில சரத்துகளை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.