நாட்டில் இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.