தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு தேவையான ஆதரவு பொலிஸாரால் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதி தேர்தல்கள் மா அதிபர் மற்றும் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பொலிஸ் அதிகாரிகளை வழங்க பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (31) இணங்கியுள்ளார்.