Saturday, February 22, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெய்லி சிலோன் வினவிய போது, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தற்போது எந்த பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும், எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles