Thursday, May 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.407 ஏர் ஏசியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த நபர் சில பயணப்பொதிகளை அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த நபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப் பொதிகளை எடுத்துச் செல்ல வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பயணப்பொதிகளை ஆய்வு செய்தபோது, ​​அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 245 இலத்திரனியல் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles