ஹென்க் பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையின் பணவீக்கம் 132 சதவீதத்திலிருந்து 123 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்த பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளதுடன், லெபனன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.