சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை டிப்பர் வாகனத்தில் கடத்திய நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற குறித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது தடுத்து வைத்துள்ளனர்.
மணல் ஏற்றிச் செல்லப்பட்ட டிப்பர் வாகனத்தின் பின்னால் மிக நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கேரள கஞ்சா பொதிகள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 21 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சாவகச்சேரி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சாவை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.