பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 45 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நபர் இன்று (29) அதிகாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.