பிரான்சின் அதிவேக ரயில் மார்க்கத்தில் தொடர் தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப விழா நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இது இணையத்தள வலைப்பின்னலை முற்றாக முடக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் எனத் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட தாக்குதல்கள் என பிரான்சின் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் காரணமாக 8 இலட்சம் ரயில் பயணிகள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை ரயில் நிலையங்களுக்கு அப்பால் செல்லுமாறு பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10இ000 இற்கும் மேற்பட்ட வீர,வீராங்கனைகள் விசேட மிதக்கும் படகுகள்மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.