ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் இருப்பதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26) காலை வெளியிடப்பட்டது.