கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 194,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 179,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,250 ரூபாவாகும்.
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22,437 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி ஒரு கிராம் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.