சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட சுங்க அதிகாரிகள், டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ஒரு தொகை மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலன்னறுவை மற்றும் தலவத்துகொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இந்த சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 4,175,000 ரூபா எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிகரெட்டுகளை சந்தைக்கு விடுவித்திருந்தால் அரசாங்ம் சுமார் 3,200,000 ரூபா வருமானத்தை இழந்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.