Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்காளிக் கட்சிகளுடன் பசில் கலந்துரையாடல்

பங்காளிக் கட்சிகளுடன் பசில் கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்திலும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, சிசிர ஜயக்கொடி, யாதாமினி குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles