Sunday, April 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு, இவ்வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில், சாரதி அனுமதி அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாததிருந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது தேவையான சாரதி அனுமதி அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காகச் சாரதி உரிமங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் நிஷாந்த அனுருந்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles