Sunday, April 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலை குறித்து இறுதி தீர்மானம் இன்று

பாண் விலை குறித்து இறுதி தீர்மானம் இன்று

பாணின் விலை தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று (26) மீண்டும் கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலையைக் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles